×

முன்னாள் படைவீரர்கள் பென்சன் அதாலத் முகாம் மதுரையில் ஏப்.23, 24ல் நடக்கிறது

கொடைக்கானல், மார்ச் 6: முன்னாள் படைவீரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக பென்சன் அதாலத் முகாம் மதுரையில் ஏப்.23, 24 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 31ம் தேதி கடைசி நாளாகும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். முப்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு வரும் ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் மதுரையில் ‘பென்சன் அதாலத்’ முகாம் நடைபெற உள்ளது.
முன்னாள் படைவீரர்கள்/ விதவையர் மற்றும் சார்ந்தோர்களிடம் இருந்து குறைகள் குறித்தான விண்ணப்பங்கள் மார்ச் 31ம் தேதிக்குள் வரவேற்கப்படுகிறது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் இதற்குரிய விண்ணப்ப படிவங்களை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பெற்று, விண்ணப்பித்து, குறைகளுக்கு தீர்வு கண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : Veterans Benson Adalat Camp ,Madurai ,
× RELATED கழிவுநீரை பொது இடத்தில் விட்டதை கேட்ட நகராட்சி கமிஷனரை தாக்க முயற்சி