×

மாரியம்மன் கோயில் தேர் முன்பு உப்பு, மிளகு போட்டு பக்தர்கள் வழிபாடு

பொள்ளாச்சி, மார்ச் 6: பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்முன்பு உப்பு, மிளகு போட்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா 3 நாள் வெள்ளி தேரோட்டம், கடந்த 4ம் தேதி துவங்கியது. கோயில் வளாகத்திலிருந்து புறப்பட்ட தேரானது, நள்ளிரவில் டிஇஎல்சிபள்ளி அருகே நிலைநிறுத்தப்பட்டது. பின் நேற்று இரவில், 2ம் நாள்தேரோட்டம் நடந்தது.

முன்னதாக, அம்மன், விநாயகர் தேர்களுக்கு பக்தர்கள் பலரும் உப்பு, மிளகு போட்டு வழிபாடு செய்தனர்.இதனால், அப்பகுதியில் பகல்நேரத்தில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. இரவில் வெங்கட்ரமணன் வீதியிலிருந்து புறப்பட்ட தேர், பாலக்காடு ரோடு தலைமை தபால்நிலையம், உடுமலை ரோடு, தேர்நிலையை வந்தடைந்தது.

இந்ததேரோட்டத்தை காண, நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். தேர்நிலைபகுதிக்கு வரும்வரையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர், இன்று மூன்றாம் நாள் தேரோட்டம் நடக்க்கிறது. ,தெப்பக்குளம்வீதிவழியாக மீண்டும் கோயிலை வந்தடைகிறது.

Tags : devotees ,Mariamman Temple Chair ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...