×

உடுமலையில் லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பால பணிகள் நிறைவு

உடுமலை, மார்ச். 6: உடுமலையில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய பேருந்து நிலையம் அருகில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சிக்னல் அகற்றப்பட்டு, ரவுண்டானா அமைக்கப்பட்டதால், மத்திய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள், தடையில்லாமல் வேகமாக வந்து செல்கின்றன.

இதனால் பாதசாரிகள் சாலையை கடப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பாத சாரிகளுக்கு வசதியாக பேருந்து நிலையம் எதிரே லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது.வயதானவர்கள் ஏறவும், இறங்கவும் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்கட்டு வசதியும் உள்ளது. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. விரைவில் புதிய நடைமேம்பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : walk ,Udumalai ,
× RELATED இந்தியாவில் கொரோனாவில் இருந்து...