×

ரூ.25 லட்சம் நலத்திட்ட உதவி உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

கோவை, மார்ச் 6: கோவையில் திமுக இளைஞரணி சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை நடந்தது. இளைஞர் அணி அமைப்பாளர் தளபதி இளங்கோ தலைமை தாங்கினார். மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். இதில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, அயர்ன் பாக்ஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம், மருத்துவ உதவி என 2,067 பேருக்கு ரூ.25  லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில், மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துசாமி, கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி, மாவட்ட திமுக நிர்வாகிகள் பி.நாச்சிமுத்து, உமா மகேஸ்வரி, குப்புசாமி, நந்தகுமார், எஸ்.எம்.சாமி, சண்முகசுந்தரம், மனோகரன், நாகராஜ், வக்கீல் மகுடபதி, இலக்கிய அணி திராவிடமணி, முன்னாள் கவுன்சிலர் முருகன், தீபா, ராஜராஜேஸ்வரி, சிங்கை பிரபாகரன், தொண்டரணி கண்ணன், விவசாய அணி ராமமூர்த்தி, சிங்கை சவுந்தர், அன்பு, குமார், காயத்ரி பாலன், குணா, பாபு பூவேந்தன், மனோகரன், மாடசாமி, சிவக்குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Udayanidhi Stalin ,
× RELATED ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட 3,000...