×

கோபி அருகே குழாய் உடைப்பை சரி செய்யாமல் தடுப்பு வைத்ததால் போக்குவரத்து பாதிப்பு

கோபி, மார்ச் 6: கோபி அருகே சாலையின் நடுவில் ஏற்பட்ட குழாய் உடைப்பை சரி செய்யாமல் தடுப்பு வைத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோபி  அருகே உள்ள பங்களாபுதூர் சாலையில் செங்கலரை கரை என்ற இடத்தில் பவானி  ஆற்றில் இருந்து நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு கோபி  நகரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகளில்  நிரப்பப்பட்டு நகராட்சி முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த  பிரதான குடிநீர் திட்டம் செயல்பாட்டு வந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் பல இடங்களில்  உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவது தொடர்ந்து நடக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு  முன் பங்களாபுதூர் சாலையில் தடப்பள்ளி வாய்க்கால் கரை வளைவில் பிரதான  குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

பல முறை முயன்றும் உடைப்பை சரி  செய்ய முடியாத நிலையில் தினமும் குடிநீர் வீணாகி வருவதுடன் அந்த  இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் விபத்தை தடுக்க தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து வாகன ஓட்டுநர்கள் கூறுகையில்,`கடந்த ஒரு மாதமாக குழாய்  உடைப்மை சரி செய்ய முடியாத நிலையில் தடுப்பு வைத்துள்ளனர். இதனால்,  இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். இதனால், குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்வதுடன் விபத்து ஏற்படுத்தும்  தடுப்பை அகற்ற வேண்டும்’ என்றனர்.

Tags : blocking ,Kobe ,
× RELATED கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி; “கோடியில் இருவர்” வெப் சீரிஸ்