×

ஈ.வி.கே. சம்பத் பிறந்தநாள் விழா

ஈரோடு, மார்ச் 6: மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈ.வி.கே. சம்பத்தின் 95வது பிறந்தநாள் விழா நேற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ள சம்பத் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந் நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மண்டல தலைவர் ஜாபர்சாதிக், துணைத்தலைவர்கள் பாஸ்கர்ராஜ், கோதண்டபாணி, பொதுச்செயலாளர்கள் கனகராஜ், தங்கவேல், பாட்சா, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : birthday party ,Ivike Sampath ,
× RELATED கருணாநிதி பிறந்தநாள் விழா 2597 பேருக்கு நிவாரண பொருட்கள்