×

கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய இடங்களில் ஏரி, அணை திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

கே.வி.குப்பம், மார்ச் 6: கே.வி.குப்பம் தாலுகாவுக்கு உட்பட்ட பசுமாத்தூர் ஏரியை கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். கே.வி.குப்பத்தில் அருகே உள்ள பசுமாத்தூர் ஏரியை தூர்வாரப்படாததால் நீரின் கொள்ளளவு ஆண்டு தோறும் குறைந்து வரும் நிலையில் அந்த ஏரி நீரிண்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், ஏரியை தூர்வாரி நீரின் கொள்ளளவு உயர்த்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணி மேற்கொண்டு வருகின்றனர். இதனை நேற்று முன்தினம் கலெக்டர் தீடீரென ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும், ஏரிதூர் வாரும் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆவணங்களை சரிபார்த்தார்.

இதில் கே.வி.குப்பம் தாசில்தார் சுஜாதா, பிடிஓக்கள் ரமேஷ்குமார், கலைச்செல்வி, ஆர்ஐ செந்தில்குமார், விஏஓ லோகேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு ஒன்றியம், ஏரி குத்தி கிராமத்திற்கு கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று வந்தார். அப்போது அங்கு பொதுப்பணித்துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளி கட்டிட பணிகளை பார்வையிட்டு அளவுகள் சரியாக உள்ளதா? கட்டிடம் உறுதியாக உள்ளதா என ஆய்வு செய்தார். பின்னர், தமிழக எல்லையில் உள்ள பத்தலப்பல்லி அணை திட்ட பணிகளை பார்வையிட்டார். அப்போது, தாசில்தார் முருகன், பிடிஓக்கள் செல்வகுமார், ஹேமலதா, மண்டல துணை தாசில்தார் வடிவேல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : lake ,Paranampattu ,KV Guppam ,
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!