×

தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நலச்சங்கம் எதிர்ப்பு கோயில் விழாவில் வெளியூர் கலைஞர்களை அழைத்து வந்து ஆபாச நடனம்


வேலூர், மார்ச் 6: கோயில் விழாவில் வெளியூர் கலைஞர்களை அழைத்து வந்து ஆபாச நடனம் ஆடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நலச்சங்கத்தினர் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எங்களது நடன கலைஞர்கள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக முறையான நடனநிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். இதனை நம்பித்தான் எங்களது வாழ்வாதாரம் உள்ளது. நடனத்தை தவிர வேறு எந்த தொழிலும் எங்களுக்கு தெரியாது. நடன நிகழ்ச்சி மூலம் 6 மாதங்கள் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான், ஆண்டு முழுவதும் குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப செலவுகளை செய்து வருகிறோம். இந்நிலையில் தற்போது வெளிமாவட்ட இடைத்தரகர்கள் சிலர் எங்கள் தொழிலில் நுழைந்து வெளிமாநில பெண்களை உள்ளூர் கோயில் திருவிழாக்களுக்கு அழைத்து வந்து அரைகுறை ஆடையில் ஆபாசமாக நடனமாட செய்கின்றனர். இது நமது கலாசாரத்தை சீரழிப்பது போன்று உள்ளது. இதுதொடர்பாக பலமுறை அவர்களுக்கு அறிவுரை கூறியும் பயனில்லை. எனவே வெளிமாநில கலைஞர்களை அழைத்துவரும் மாற்று மாவட்ட இடைத்தரகர்களை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Tags :
× RELATED போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற...