×

இறந்தவர் யார்? போலீசார் விசாரணை சாலையில் சுருண்டு விழுந்த முதியவர் பலி

வேலூர், மார்ச் 6: வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரே முதியவர் ஒருவர் நேற்று காலை 7 மணியளவில் நடைபாதையில் நடந்து சென்றார். அப்போது திடீரென அவர் சாலையிலேயே சுருண்டு விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சடலத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தாரா? வெளிமாநிலத்தை சேர்ந்தவரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் முதியவர் திடீரென சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED தொலைந்த செல்போனை பயன்படுத்தி பெண்...