×

ஒன்றிய துணை தலைவர் தேர்தல் அதிமுக கவுன்சிலர் ஓட்டம்: 3வது முறை ஒத்திவைப்பு

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு அதிமுக கூட்டணி கட்சிகள் 7 இடங்களில் வெற்றி பெற்றதால் அக்கட்சியின்  ஜான்சிராணி விஸ்வநாதன் போட்டியின்றி  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் ஒன்றிய குழு துணைத் தலைவர் பதவிக்கு  அதிமுக கவுன்சிலர்கள் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் இரண்டு முறை நடைபெற்ற  தேர்தலில் கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாததால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில்  அதிமுக  ஒன்றிய கவுன்சிலர்கள் இருவர், திமுகவை சேர்ந்த 4 பேர்,  தேமுதிக கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 7 பேர் தேர்தலில் கலந்து கொண்டனர்.  சிறிது நேரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் அதிமுக கவுன்சிலர் முத்துராமன் அங்கிருந்து  ஓட்டம் பிடித்தார்.  போதிய உறுப்பினர்கள் இல்லாமல் 3வது முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Union Vice President Electoral Councilor Flow ,
× RELATED ஒன்றிய துணை தலைவர் தேர்தல் அதிமுக கவுன்சிலர் ஓட்டம்: 3வது முறை ஒத்திவைப்பு