×

நகை திருடிய டிரைவர் கைது

புழல்: புழல் - அம்பத்தூர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பைச்  சேர்ந்தவர் தசரதன் (64) அவருடைய மனைவி அமுதா (60). பெரம்பூர் வீனஸ் பூங்கா தெருவைச் சேர்ந்தவர் ராமர் (34) என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக கார் டிரைவராக  இவர்களிடம் பணியாற்றி வந்தார்.  கடந்த 4ம் தேதி தசரதன் வீட்டில்  இருந்த  5 சவரன் நகை திருடு போனது. இதுகுறித்து தசரதன் புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணையில், கார் டிரைவர் ராமர் நகைகளை  திருடியது தெரிந்தது. அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 சவரன் நகையும் பறிமுதல் செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED லாரி டிரைவரிடம் வழிப்பறி