×

மதுராந்தகம் பகுதிகளில் பூச்சி கொல்லி நோயால் பாதிக்கும் பயிர்கள்

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதிகளி–்ல பூச்சி கொல்லி நோயால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை என சரமாரி புகார் கூறுகின்றனர். மதுராந்தகம் நகரை ஒட்டி மதுராந்தகம் ஏரி அமைந்துள்ளது. இந்த  ஏரியின் நீரை பயன்படுத்தி சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் தற்போது பிபிடி, 51 ஆகிய ரக நெற்பயிர்களை இப்பகுதி விவசாயிகள் அதிகளவில் பயிர் செய்கின்றனர். தற்போது, நன்கு செழித்து வளர்ந்த நெற்பயிர்கள் கதிர் விடும் தருவாயிலும், சில  பகுதிகளில் கதிர்விட்டும் காணப்படுகிறது.இந்த வயல்வெளி பகுதிகளில் காணப்படும் பெருவாரியான நெற்பயிர்களில் கழுத்து நோய் ஏற்பட்டுள்ளது. அதேபோல், கதிர் வந்த நெற்பயிர்களில் குருத்து பூச்சி எனப்படும் ஒரு வகை பூச்சி  தாக்குதலும்  அதிகமாக காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் வழக்கம்போல அவர்கள் அறுவடை செய்யும் அளவுக்கான நெல் மகசூல் தற்போது இருக்காது என வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக,இதுபோன்ற பூச்சி தாக்குதலால், வழக்கமான நெல்  மகசூலில் 50 சதவீதம் குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதற்கு என்ன மருந்து தெளிக்க வேண்டும் என்பது குறித்தும் அவர்களுக்கு சரிவர தெரியவில்லை.

மதுராந்தகத்தில் உள்ள விவசாயத் துறை அலுவலக அதிகாரிகள் இதுபோன்ற சூழ்நிலைகளில் நேரடியாக வயல்வெளிகளை பார்வையிட்டு எந்தெந்த பயிருக்கு என்ன மருந்து தெளிக்க வேண்டும் என ஆலோசனை தெரிவிக்க வேண்டும். ஆனால்,  அவர்கள் கண்டுகொள்வதே இல்லை என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.அதிகாரிகள் வந்து பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினால், அவர்களுக்கு எந்த பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தால் பலன் கிடைக்கும் என்பது  தெரியவரும். ஆனால், அதிகாரிகளுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லாமல் உள்ளது என கூறுகின்றனர்.எனவே, மதுராந்தகம் நகரை ஒட்டிய ரயில்வே இருப்பு பாதையின் இருபக்கங்களிலும் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை, நாசமாவதற்கு  முன் பார்வையிட்டு என்னென்ன பூச்சிமருந்து தெளிக்க வேண்டும். அரசு மானியத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்படுகிறதா என விளக்கம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Tags : breeding areas ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...