×

காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு கைலாசநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம், மார்ச் 6: காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு  காமாட்சி அம்பாள் சமேத மேற்கு கைலாசநாதர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில், காஞ்சி சங்கரமட பீடாதிபதி விஜயேந்திரர் கலந்துகொண்டார்.
காஞ்சிபுரத்தை அடுத்த சிவலிங்கம் மேடு என்றழைக்கப்படும் செவிலிமேடு பகுதியில் ஏரிக்கரை அருகில் ராகு - கேது பரிகார தலமாக விளங்கும்  காமாட்சி அம்பாள் சமேத  கைலாசநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நேற்று விமர்சையாக  நடந்தது.
இதனை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனையை தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று மூலவர் விமானம், உற்சவ மூர்த்திகள் மற்றும் ராகு கேது மூலவருக்கு சிறப்பு அபிஷேக,  ஆராதனைகள் நடந்தன.
சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரர் கலந்துகொண்டு மூலவர் விமானத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. காமாட்சி அம்மன் கோயில் காரியம்  சல்லா விஸ்வநாத சாஸ்திரி சங்கர மட காரியம் செல்லப்பா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

 மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே ஈசூர் கிராமத்தில் அலமேலு மங்கை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 3ம் தேதி மாலை சங்கல்பம்,  விக்னேஸ்வரா ஆராதனை, மகா பூர்ணாஹுதி, வாஸ்து சாந்தி ஆகியவை நடந்தது. நேற்று முன்தினம் காலை சாற்று முறை, மகாஹோமம், மாலையில் மகா அர்ச்சனையும் நடந்தது.நேற்று காலை 5 மணியளவில் மங்கல இசையுடன்  கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. இதையொட்டி, யாகசாலையில் இருந்து வேத விற்பன்னர்களால் புனிதநீர் கொண்டு செல்லப்பட்டு, கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர்,  அங்கிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதி ஈசூர், பூதூர், வள்ளிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம், மோர் வழங்கப்பட்டது.

Tags : Kumbashishkam ,Kailasanathar Temple ,Kanchipuram ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...