×

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் 2 எம்.எல்.ஏக்கள் உள்பட 717 பேர் மீது வழக்குபதிவு

நாகர்கோவில், மார்ச் 6: இடலாக்குடியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 2 எம்.எல்.ஏக்கள், 501 பெண்கள்  உள்பட 717 பேர் மீது கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி இளங்கடை முஸ்லீம் சமுதாய டிரஸ்டிற்கு சொந்தமான சமூக நலக்கூடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து கோட்டாறு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில், தமுமுக மாவட்ட செயலாளர் ஜெகபர் சாதீக், பச்சை தமிழகம் நிறுவனத் தலைவர் சுப உதயகுமார், பாவா காசீம் ஒலியுல்லா பள்ளிவாசல் தலைமை இமாம் ஷேக் முகமது, பாப்புலர் பிரண்ட் மாவட்டதலைவர் மாகீன் அபுபக்கர், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன்,  எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், சுரேஷ்ராஜன், குமரி மக்கள் ஒற்றுமை மேடை தலைவர் நாகராஜன், மார்க்சிஸ்ட் மாநில ெசயற்குழு உறுப்பினர் நூர்முகம்மது மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன், முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ், எஸ்டிபிஐ சாதீக், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில பேச்சாளர் அன்சூர், நாம்தமிழர் கட்சி ஹீம்லர், உஸ்மான், எம்.கே.கான், பகுஜன் சமாஜ் பாசி என்ற சுரேஷ் ஆனந்த் மற்றும் 501 பெண்கள் உள்பட 717 பேர் மீது குடியுரிமை சட்டத்திற்கு விரோதமாக 24 மணி நேரம் கூடியும், போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : Citizenship Law ,
× RELATED குடியுரிமை சட்டத்திருத்தத்தை...