ரத்னா நினைவு மருத்துவமனையில் குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நாளை நடக்கிறது

சாமியார்மடம், மார்ச் 6: சாமியார்மடம் ரத்னா நினைவு மருத்துவமனை மற்றும் ரத்னா டெஸ்ட் டியூப் பேபி மையம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை (7ம் தேதி) குழந்தையில்லா தம்பதியருக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. முகாமில் இலவச மருத்துவ ஆலோசனை, விந்தணு சோதனை, ஸ்கேன் போன்றவை இலவசமாகவும், சலுகை கட்டணத்தில் ஹார்மோன் பரிசோதனையும் செய்யப்படுகிறது. முகாமில் குழந்தையின்மைக்கான சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர் டாக்டர் சாந்தி மகிழன், ரத்னா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர். மகிழன் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சையும், ஆலோசனையும் வழங்குகின்றனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை களியக்காவிளை ரத்னா டெஸ்டியூப் பேபி மையத்தில் இருந்து சாமியார்மடம் ரத்னா நினைவு மருத்துவமனை வரை மகளிர்தின விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. இந்த பேரணி மகளிருக்கு சம உரிமை என்ற நோக்கத்தோடு நடக்கிறது. மேலும் மகளிர் காவலர்களுக்கான இலவச சிறப்பு பரிசோதனை மற்றும் மருத்துவ முகாமும், இரவு மகளிருக்கான விருது வழங்கும் விழாவும் நடக்கிறது. நிகழ்ச்சிகளை ரத்னா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மகிழன், ரத்னா டெஸ்ட்டியூப் பேபி மைய இயக்குனர் சாந்தி மகிழன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories:

>