×

தூத்துக்குடியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி, மார்ச் 6: தூத்துக்குடி மாவட்ட மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (6ம்தேதி) நடைபெறுகிறது.   இதுகுறித்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குநர் பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (6ம்தேதி) காலை 10.30 மணி அளவில் நடக்கிறது. இதில் பல முன்னணி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளதால் 10, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேற்கண்ட தகுதியுள்ள, தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, கல்வி சான்றுகளுடன் முகாமில் பங்கேற்கலாம். தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படுபவரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது.  தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய இம்முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களை 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : employment camp ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடியில் இருந்து 913 தொழிலாளர்கள் சொந்த ஊர் அனுப்பி வைப்பு