×

களக்காட்டில் காங். நிர்வாகிகள் கூட்டம்

களக்காடு, மார்ச் 6: களக்காட்டில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ரூபி மனோகரன் கலந்து கொண்டார்.  களக்காட்டில்  நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.  நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட  ரூபிமனோகரன் தலைமை வகித்தார். நகர தலைவர் ஜார்ஜ் வில்சன் முன்னிலை  வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் மோகன் குமாரராஜா, தமிழ்செல்வன், மாவட்ட மகளிரணி தலைவி தனிதங்கம், வட்டார தலைவர் அலெக்ஸ், முன்னாள்  வட்டார தலைவர் தனபால், அழகிய நம்பி, செல்லபாண்டி உள்பட பலர் கலந்து  கொண்டனர். கூட்டத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வருகிற 8ம் தேதி  களக்காட்டில் ரூபி மனோகரன் தலைமையில் சாரிடபுள் டிரஸ்ட்  மற்றும் பீஸ் ஹெல்த் சென்டர் இணைந்து பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம்  நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : field ,Meeting ,Administrators ,
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது