×

அம்பையில் உலக வன உயிரின தினம்

அம்பை, மார்ச் 6:  மணிமுத்தாறு செக்போஸ்ட் பகுதியில் உலக வன உயிரின தினம் கொண்டாடப்பட்டது.  ஆண்டுதோறும் மார்ச் 3ம் ேததி உலக அளவில் வன உயிரின தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை வனச்சரகத்திலும் உலக வன உயிரின தினம் கொண்டாடப்பட்டது. இதில் துணை இயக்குநர் செந்தில்குமார், வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் அறிவுரையின் பேரில் மணிமுத்தாறு செக் போஸ்ட் பகுதியில் நடந்த உலக வன உயிரின தின விழாவுக்கு பயிற்சி வனச்சரக அலுவலர் நவீன் குமார் தலைமை வகித்தார். பயிற்சி வனச்சரக அலுவலர் பாரதிதாசன் முன்னிலை வகித்தார். வரவேற்று பேசிய வனவர் முருகேசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆலங்குளம் ஆர்ச்வெல் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் 30 பேரை சோலார் படகில் மணிமுத்தாறு நீர்த்தேக்க பகுதியை சுற்றி காண்பித்தார். இவர்களுக்கு பயிற்சி வனச்சரக அலுவலர் பிரதாப், வன விலங்குகள் குறித்த கையேடுகளை வழங்கினார்.  நிகழ்ச்சிகளில் மாணவர்கள், ராஜ், சூசைகனி, ரமேஷ் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் வன அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : World Wildlife Day ,
× RELATED புளியங்குடி பள்ளியில் உலக வனவிலங்கு தினவிழா