×

மானூர் அருகே பைக்கில் இருந்து விழுந்தவர் படுகாயம்

மானூர், மார்ச் 6:  மானூர் அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்தவர் மணி (58). கடந்த 3ம் தேதி சொந்த வேலை காரணமாக  பைக்கில் ராமையன்பட்டி - சங்கரன்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நாய் குறுக்கே பாய்ந்ததால், நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த இவரை அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து மணி மனைவி ராமலட்சுமி (56) கொடுத்த புகாரின் பேரில், மானூர் எஸ்ஐ சையத் நிசார் அகமத் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Manoor ,
× RELATED ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி...