×

தேவிபட்டினத்தில் டிராக்டர் டிரைவர் மர்மச்சாவு?

சிவகிரி, மார்ச் 6: சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் வஉசி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). டிராக்டர் டிரைவர். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், தேவி, கவிதா என இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று சுடுகாட்டில், காதில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து முருகேஸ்வரி சிவகிரி போலீசில் புகார் செய்தார். சிறப்பு எஸ்ஐ கணேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்ைத கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tractor Driver Marmachau ,
× RELATED தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி