×

லாரி மீது வேன் மோதியது 10 மாணவிகள் காயம்

திண்டிவனம், மார்ச் 5:திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு, செண்டூர், கீழ் எடையாளம், கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தனியார் வேனில் புதுச்சேரி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவிகளை அழைத்து சென்றனர். இந்த வேனை சின்ன நெற்குணத்தை சேர்ந்த நாகலிங்கம் மகன் வினோத் (23) என்பவர் ஓட்டி வந்தார். திண்டிவனம் ஜக்காம்பேட்டை சந்திப்பில் வந்த போது, சென்னையிலிருந்து மதுரைக்கு சென்ற லாரி திண்டிவனத்திற்கு உள்ளே செல்வதற்காக திரும்பியது. அப்போது கூட்டேரிப்பட்டு திசையிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த வேன் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் ஆர்த்தி(12), ரேணுகாதேவி(14), ஹேமமாலினி (13), நிதி (8), சிவரஞ்சனி(12), கீர்த்தனா(9), தர்ஷினி(8), தனுஷ்கா (8), ரஞ்சனா(12),அமிர்த பிரியா(8), உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்தனர். அவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : van crashes ,
× RELATED மாணவர்களுக்கான இணையதள பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது சிபிஎஸ்இ