×

அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா

போச்சம்பள்ளி, மார்ச் 5: மத்தூர் ஒன்றியம், கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மறுசுழற்சி, மாசுக்கட்டுப்பாடு, இயற்கை உரம் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் வைத்த படைப்புகள், பார்வையாளர்களை கவர்ந்தது. மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக சர் சி.வி.ராமனின் வாழ்கை வரலாறு, ராமன் விளைவு ஆகியவை, மாணவர்களுக்கு காணொலி காட்சி மூலம் திரையிட்டு காட்டப்பட்டது.

Tags : National Science Day ,Government School ,
× RELATED அப்துல் கலாம் தங்கள் நாட்டில் காலடி...