×

ஓசூர் எம்ஜிஆர் கல்லூரியில் சொற்பொழிவு

ஓசூர், மார்ச் 5: ஓசூர் எம்ஜிஆர் கல்லூரி உயிர் வேதியியல் துறை சார்பில் நேற்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை வகித்தார். வேதியியல் துறைத்தலைவர் பகுத்தறிவு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவர்(ஓய்வு) கிரிஜா ஆதித்யா கலந்துகொண்டார். அவர் இயந்திர உலகில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான அவசியத்தை மாணவர்களுக்கு விளக்கினார். புதுப்புது உணவு முறையை தேடிச்செல்லாமல் பாரம்பரிய உணவுகளை பயன்படுத்திட வேண்டும் என்பதை மேற்கோள்காட்டி பேசினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர் அனிதா நன்றி கூறினார்.

Tags : Lecture ,MGR College ,Hosur ,
× RELATED 2017ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர்...