×

இருப்பாளியில் நடந்த விழாவில் 5889 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

சேலம், மார்ச் 5: சேலம் மாவட்டம் இடைப்பாடி இருப்பாளியில் நடந்த விழாவில் 5889 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்ட அடிக்கல் நாட்டு விழா இடைப்பாடி அருகயேுள்ள இருப்பாளி ஊராட்சி மேட்டுப்பட்டி ஏரியில் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்ததுடன், அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் வரவேற்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ₹7.26 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ₹593.82கோடிக்கான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 5,889 பேருக்கு₹29.65கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்து வழித்தடத்தை நீட்டிப்பு செய்தார். மேட்டூரில் இருந்து வனவாசி மேல்ரோடு, ஜலகண்டாபுரம் வரை செல்லும் பேருந்தை, வனவாசி பாலிடெக்னிக் வரை காலை மற்றும் மாலை நேரத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட்டிப்பு செய்தார். இந்த நிகழ்ச்சியில்  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, எம்எல்ஏக்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், ராஜா, வெற்றிவேல், சின்ன தம்்பி, மருதமுத்து, சித்ரா, மனோன்மணி, சேகோ சர்வ் தலைவர் தமிழ்மணி, பால் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராமன்,
இடைப்பாடி ஒன்றிய குழு தலைவர் குப்பாயிஅம்மாள் மாதேஷ், நங்கவள்ளி ஒன்றியக்குழு தலைவர் பானுமதி சுப்ரமணியம், துணைத்தலைவர் சண்முகம்,

சேலம் தெற்கு மாவட்ட பாமக அமைப்பு செயலாளர் பாலசுப்ரமணியன், இடைப்பாடி முன்னாள் நகராட்சி தலைவர் கதிரேசன், கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவர் கரட்டூர் மணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சம்பூரணம் மாதேஷ்வரன், நகராட்சி ஆணையாளர் சென்னகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடைப்பாடி சிராஜூதீன், சுஜாதா, கொங்கணாபுரம் ரவிச்சந்திரன், கண்ணன், ஒன்றிய குழு துணைத்தலைவர் ராணிராமசாமி, ஒன்றிய பொறியாளர் சீனிவாசன், தனி அலுவலர்கள் ராஜவிஜயகணேசன், பாலசுப்பிரமணி, செயல் அலுவலர்கள் பூலாம்பட்டி சசிகலா, தேவூர் வைஜெயந்தி, அரசிராமணி நீலாதேவி, கோரணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், துணைத்தலைவர் கோபால், சங்ககிரி ஆர்டிஓ அமிர்தலிங்கம், தாசில்தார் கோவிந்தராஜன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565...