×

அரசு மகளிர் கல்லூரியில் 833 மாணவிகளுக்கு பட்டம்

சேலம், மார்ச் 5:சேலம் கோரிமேட்டில் அரசு மகளிர் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் பெத்தா லட்சுமி தலைமை வகித்தார். பெரியார் பல்கலைக்கழக தேர்வாணையர் (பொறுப்பு) கதிரவன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 833 இளங்கலை, முதுகலை மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Government Women's College ,
× RELATED சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு...