×

சேலம் தெற்கு எல்ஐசி கிளையில் புதிய திட்டங்கள் அறிமுக விழா

சேலம், மார்ச் 5:சேலம் கோட்டை பகுதியில் உள்ள தெற்கு எல்ஐசி கிளையில் புதிய திட்டங்கள் அறிமுக விழா நடந்தது. விழாவிற்கு தெற்கு கிளையின் முதன்மை மேலாளர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். சேலம் முதுநிலை கோட்ட மேலாளர் பசுலுல் ரஹ்மான் குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரை ஆற்றினார். மேலும், சிறந்த முறையில் புதுவணிகம் புரிந்த வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் முகவர்களை பாராட்டினார்.  இந்த விழாவில் கோட்ட விற்பனை மேலாளர் நேரு, கிளை மேலாளர்கள், ஊழியர்கள், முகவர்கள் மற்றும் பாலிசிதார்கள் என ஏராளாமனவர்கள் கலந்து கொண்டனர்.  விழாவில் நிவேஷ் பிளஸ், எஸ்ஐஐபி ஆகிய இரு பாலிசியை வி.எம்,எஸ் அணியினர் மற்றும் முகவர் தனசேகரன் பெற்று கொண்டனர். மேலும், அலுவலக  மேலாளர் ராஜ்மோகன், உதவி நிர்வாக அதிகாரி நந்தகுமார், நிர்வாக அதிகாரி தணிகாசலம் உடனிருந்தனர். உதவி கிளை மேலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Tags : Launch ,
× RELATED கேரளாவில் லாட்டரி குலுக்கல் துவக்கம்