×

தூத்துக்குடியில் ஒரே நாளில் 45 ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தூத்துக்குடி, மார்ச் 5: தூத்துக்குடி மாநகராட்சியில் நேற்று ஒரே நாளில் 45 ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறான கட்டிடங்களை அகற்ற வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிகள் வாரம்தோறும் முன்னெச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கின்றனர். இதையடுத்து அடுத்த வார நாட்களில் ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுகின்றனர்.

ஆனால், அதன்பிறகும் மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி வருகின்றனர். அந்த வகையில் நேற்று  தூத்துக்குடி குறிஞ்சிநகர் மற்றும் தனசேகரன் நகர் உள்ளிட்டபகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அடுத்தடுத்து ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன. இதில் அப்பகுதியில் இருந்த 45 ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டன. இதில் 15 டிஜிட்டல் பேனர்கள் மற்றும் 30 கட்டிட ஆக்கிரமிப்புகள் ஜேசிபி உதவியுடன் அகற்றப்பட்டன. இப்பணியில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொண்டனர்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது