×

சூளகிரி அருகே விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

சூளகிரி, மார்ச் 5:சூளகிரி அருகே உள்ள சித்தாண்டப்பள்ளி கிராமத்தில், தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் மற்றும் சங்க கொடியேற்று விழா நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்ணப்பன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், மாவட்ட அவைத்தலைவர் நஷீர், கிளைச் சங்க தலைவர் முருகேசன், செயலாளர் ராஜா, இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், துணை செயலாளர் வரதராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சித்தாண்டப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீரை வழங்க வேண்டும்.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து துரை ஏரி வழியாக கிருஷ்ணகொண்டப்பள்ளி, சித்தாண்டப்பள்ளி, பெத்ததாளப்பள்ளி, நேரலகிரி, வேப்பனஹள்ளி வரை கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். வாணிஒட்டு மற்றும் ஆழியாளம் அணைத்திட்டத்தை 200 அடியாக உயர்த்தி சூளகிரி, ஓசூர் பகுதிகளில் தண்ணீர் பஞ்சத்தை போக்க வேண்டும். வன விலங்குகளால் வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Farmers' Association Advisory Meeting ,Sulagiri ,
× RELATED சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில்...