×

வெ.புதூர் சாலையோரத்தில் குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு

கடத்தூர், மார்ச் 5: கடத்தூர் அடுத்த வெ. புதூர் பகுதி சாலையோரத்தில்,  குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, கடத்தூர் அடுத்த வெ.புதூர் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சேகரமாகும் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்து சாலையோரத்தில் கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசிகள் புகை மூட்டத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்க ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலையோரத்தில் குப்பை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED இலவச மின்சாரத்தை துண்டித்தால்...