×

படியிலிருந்து தவறி விழுந்து மருத்துவமனை ஊழியர் பலி

சிவகாசி, மார்ச் 5: சிவகாசி அருகே சாட்சியாபுரத்தை சேர்ந்தவர் விஜயராகவன் (50). இவர் அந்த பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் 27ம் தேதி தனது வீட்டு மாடிக்கு படியில் ஏறிக் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்தார். காயமடைந்த அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : Hospital employee ,
× RELATED சினிமாவுக்கு சென்று திரும்பியபோது...