×

ராஜபாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா

ராஜபாளையம், மார்ச் 5: ராஜபாளையம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.  பிஏசிஎம் மேல்நிலைப் பள்ளி மற்றும் பிஏசிஆர் அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு  மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 476 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு ராம்கோ குரூப் பிஏசிஆர் சேதுராமம்மாள், டிரஸ்டி சாரதா தீபா தலைமை வகித்தார்.

ராம்கோ கல்வி குழும முதன்மை கல்வி அலுவலர்வெங்கட்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் பிஏசிஎம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 269 சைக்கிள்களும் பிஏசிஆர் அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு 207 சைக்கிள்களும் வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார்.

Tags : Cycling ceremony ,school children ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து