×

வத்திராயிருப்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம் அனைத்து கட்சியினர் பங்கேற்பு

வத்திராயிருப்பு, மார்ச் 5: சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை எதிர்த்து  வத்திராயிருப்பு வட்டார அனைத்து முஸ்லிம் ஜமாத்தார் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது. வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு கூமாப்பட்டி முஸ்லிம் ஜமாஅத் தலைவா் இனாய்த்துல்லா தலைமை வகித்தார். வத்திராயிருப்பு ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் முகம்மதுஅலி ஜின்னா பைஜி வரவேற்றார்.

திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அன்னக்கொடி, இ.கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ இராமசாமி, முன்னாள் எம்பி அழகிரிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு ஒன்றியச்செயலாளர் ராஜ், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர், பிரபாகர் மூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, பிஎப்ஐ மாநில துணைத்தலைவர் காலித்முகம்மது, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன், உஸ்மானியா அரபி கல்லூரி பேராசிரியா் முகம்மது இல்யாஸ் உஸ்மானி, பேரூர் திமுக செயலாளர் குமார், பேரையூா் கிறிஸ்துவ பாதிரியார் பன்னீர்ராஜ் உள்ளிட்ட பலர் பேசினர்.

திமுக மாவட்ட துணைச்செயலாளர் துரை, திமுக ஒன்றியச்செயலாளர் முனியாண்டி, காங்கிரஸ் மேற்கு வட்டார தலைவர் அண்ணாத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பலர் தேசியக்கொடி ஏந்தி நின்றனர். கூட்டம் முடிவில் தேசிய கீதம் பாடப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags : parties ,meeting ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...