×

திருச்சுழியில் 1008 திருவிளக்கு பூஜை

திருச்சுழி, மார்ச் 5: திருச்சுழியில் மாசி திருவிழாவை முன்னிட்டு 1008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. திருச்சுழியில் உள்ள ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு மாசி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இரவு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இதனையடுத்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் காலையும், இரவும் வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம் என பல்வேறு வாகனங்களில் முக்கிய வீதிகளில்  உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். வெள்ளியன்று அம்மனுக்கு பொங்கல் உற்சவவிழா நடைபெறுவதையொட்டி நேற்று 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் திருச்சுழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபாடு செய்தனர்.

Tags : Tiruvallu Pooja ,Tiruchuzhi ,
× RELATED தமிழகத்தில் மேலும் 1927 பேருக்கு கொரோனா;...