×

ராஜபாளையத்தில் குப்பைத்தொட்டியில் பற்றிய தீயால் பரபரப்பு

ராஜபாளையம், மார்ச் 5: ராஜபாளையம் ரயில் நிலையம் எதிரில் ஆஸ்பத்திரி சாலையில் மின்வாரிய டிரான்ஸ்பர் மற்றும் வாகன காப்பகம் உள்ளது. இந்த டிரான்பார்மர் அருகில் நகராட்சி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு  குப்பை தொட்டிகளில் ஒன்றில் தீ பற்றி எரிந்தது. காற்றின் வேகத்தில் டிரான்பார்மர் அருகில் தரையில் சிதறி கிடந்த குப்பைகளிலும் தீ பரவி எரிந்தது. இது குறித்து ராஜபாளையம் தீயணைப்புத்துறையினருக்கு அப்பகுதிமக்கள் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 2 மணி நேர போராடி தீயை அணைத்தனர். அவர்கள் விரைந்து செயல்பட்டதால், டிரான்ஸ்பார்மர் மற்றும் காப்பகத்தில் இருந்த டூவீலர்கள் தீ விபத்தில் சிக்காமல் தப்பின. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : trash bin ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!