×

விருதுநகரில் சர்வீஸ் ரோடு இல்லாததால் 4 வழிச்சாலையில் விபத்து அபாயம்

விருதுநகர், மார்ச் 5: விருதுநகர் வழி செல்லும் நான்கு வழிச்சாலையில் ஒரு கி.மீ தூரத்திற்கு இருபுறமும் சர்வீஸ் ரோடு இல்லாததால் வாகனங்கள் எதிர், எதிரே வருவதால் விபத்துகள் தொடர் கதையாகி வருகிறது. நான்கு வழிச்சாலைகள் விபத்தை குறைப்பதாகவும், துரித போக்குவரத்திற்கும் உருவாக்கப்பட்டன. நான்கு வழிச்சாலை செல்லும் பாதையில் உள்ள கிராமங்கள், நகரங்களின் ஓரங்களில் சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்பட்டு
இருக்கின்றன.

சர்வீஸ் ரோடுகளில் இருந்து நான்கு வழிச்சாலைக்கு ஏறும் இடங்களில் வேகத்தடைகள் இல்லாததால் சர்வீஸ் ரோட்டில் இருந்து நான்கு வழிச்சாலைக்குள் வேகமாக நுழையும் வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. விருதுநகரில் பாண்டியன் காலனி துவங்கி  வடமலைக்குறிச்சி ரோடு, பவாலி ரோடு வரையிலான ஒரு கி.மீ தூரத்திற்கு சர்வீஸ் ரோடு இல்லை. இதனால் பாண்டியன் காலனியில் இருந்து வடமலைக்குறிச்சி செல்லும் மக்கள் நான்கு வழிச்சாலையில் எதிரே செல்ல வேண்டிய  நிலை உள்ளது. வடமலைக்குறிச்சி ரோட்டில் இருந்து பாவாலி ரோடு வரை செல்லும் வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் எதிரே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அதே போல் மறுபகுதியில் கலைஞர் நகரில் இருந்து சிவகாசி ரோடு வரை செல்ல வேண்டிய மக்கள் நான்கு வழிச்சாலையில் எதிரே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பகல், இரவு நேரங்களில் விபத்துகள் தினசரி நடக்கின்றன. சர்வீஸ் ரோடு அமைக்க கோரி கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் வைத்து வரும் கோரிக்கை வெற்று அறிக்கையாகி விபத்துக்கள் தொடர்கதையாகி வருகிறது. நான்கு வழிச்சாலை ஆணைய அதிகாரிகள் சர்வீஸ் ரோடு அமைக்க உரிய ஏற்பாடுகளை விரைவாக செய்ய வேண்டுமென நகர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : service road ,lane ,Virudhunagar 4 ,
× RELATED தோவாளை அருகே நான்குவழிச்சாலையில்...