×

சொட்டு நீர் பாசனத்தில் வாழை விவசாயம் நிலங்கள் விஸ்தரிப்பு

சின்னமனூர், மார்ச் 5: சின்னமனூர் பகுதிகளில் நிலத்தடி நீர் பாசனத்தை கட்டுப்படுத்தி சேமிக்கும் வகையில் சொட்டுநீர் பாசனத்தில் வாழை விவசாய நிலங்களை விவசாயிகள் விஸ்த்தரிப்பு செய்து வருகின்றனர். சின்னமனூர் பகுதியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொண்ட பல்வேறு பயிர்களை விளைவித்து எடுக்கும் இயற்கை மண் வளம் தன்மை கொண்ட ஊராக விளங்கி வருகிறது.

அதன்படி முத்துலாபுரம், சின்ன ஓவுலரபுரம், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், மூர்த்தி நாயக்கன்பட்டி, சீலையம்பட்டி, குச்சனூர், எல்லப்பட்டி, அய்யம்பட்டி, புலிகுத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வருட பலன் தரும் வாழை விவசாயம் தொடர் சாகுபடியாக நிலத்தடி நீர் பாசனத்தில் செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பருவ காலங்கள் மாறி பருவமழை சரிவர பெய்யாமல் நிலங்கள் எல்லாம் வறண்ட நிலை ஏற்பட்டு விவசாயத்தில் தொய்வு காணப்பட்டது.

Tags : banana cultivation lands ,
× RELATED ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர்...