×

செல்போன் பேசியவாறு ‘டிரைவிங்’ விதிமீறும் வாகன ஓட்டிகள்

காரைக்குடி, மார்ச் 5: காரைக்குடி பகுதி வளர்ச்சிக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கல்விநிறுவனங்கள், தொழிற்சாலை மற்றும் சுற்றுலாதளமாக உள்ளதால் அதிக அளவில் டூவீலர் மற்றும் நான்குசக்கர வாகனங்கள் வளர்ந்த நகரங்களுக்கு இணையாக உள்ளன. நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப போக்குவரத்துக்கு புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை. போக்குவரத்து போலீசாரின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில் தான் போக்குவரத்து போலீசார் எண்ணிக்கை உள்ளது. இப்பகுதியில் முறையான லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் பேசியபடி சென்ற பள்ளிவாகனம் கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து வாகன ஓட்டுனர்கள் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டக் கூடாது என சட்டம் போடப்பட்ட போது முனைப்புடன் செயல்பட்டு நடவடிக்கை எடுத்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் கொஞ்சம், கொஞ்சமாக சுணக்கம் காட்ட துவங்கி உள்ளனர். இச்சட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

செல்போன் பேசியபடிதான் வாகனங்கள் ஓட்டுகின்றனர். எனவே செல்போன் பேசியபடியோ அல்லது 18 வயதுக்கு உட்பட்டவர்கள் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், செல்போன் பேசியபடியோ, முறையான லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் வாகனத்தை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைக்கலாம் என்றார்.

Tags : Motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...