×

பூண்டி கலைவாணன் எம்எல்ஏ வழங்கினார் முக்குளத்தை ஆக்கிரமித்த வெங்காய தாமரைகள் அதிகாரிகளை நம்பி பயனில்லை பொதுமக்களே அகற்றினர்



திருத்துறைப்பூண்டி,மார்ச்5: திருத்துறைப்பூண்டி அருகே குளத்தில் மண்டி கிடந்த வெங்காயதாமரை செடிகளை பொதுமக்களே அகற்றினர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சியில் மடத்துக்குளம், யானை விழுந்தான்குளம், கொத்தரை குட்டைகுளம், விட்டுக்கட்டி பகுதியில் மாரியம்மன் குளம், சங்ககுளம், பள்ளிகுளம், வீரபுரம் பகுதியில் பாப்பன்குளம், மடப்புரம் பகுதியில் முக்குளம், ஒரியன் குட்டை குளங்கள் உள்ளது. அனைத்து குளங்களும் வெங்காய தாமரைகள், பாசிகள் மண்டிகிடப்பதால் குளத்துநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், அப்பகுதி மக்கள் மடப்புரம் பகுதியில் உள்ள முக்குளத்தில் மண்டி கிடக்கும் வெங்காய தாமரை செடிகள், பாசிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து திமுக ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கியமேரி கூறிகையில், வரம்பியம் பகுதிகளில் அனைத்து குளங்களும் வெங்காய தாமரைகள், பாசிகள் மண்டிக் கிடக்கிறது. இதன் பாசிகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வெங்காய தாமரைகளை அகற்ற முன் வரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆகாய தாமரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து குளங்களையும் பொதுமக்களே செடிகளை அகற்ற முடியாது என்பதால் அனைத்து குளங்களையும் சுத்தம் செய்து கொடுக்க மாவட்ட கலெக்டரும், ஒன்றிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டு என்றார்.

Tags : Bundi Kalaivanan MLA ,public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...