×

மேலூர் ஒன்றியத்தில் ஊராட்சி துணை தலைவர் தேர்தல் மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு

மேலூர், மார்ச் 5:மேலூர் ஒன்றியத்தில் துணை தலைவர் தேர்வு செய்யப்படாமல் இருந்த 3 ஊராட்சிகளுக்கு நேற்று மூன்றாவது முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டும், போதிய உறுப்பினர்கள் வராததால் தேர்தல் நடைபெறவில்லை. மேலூர் ஒன்றியத்தில் தெற்குதெரு, அரசப்பன்பட்டி, பூஞ்சுத்தி என 3 ஊராட்சிகளில் துணை தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. ஏற்கனவே 2 முறையும் போதிய வார்டு உறுப்பினர்கள் வரவில்லை என காரணம் காட்டி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று விடுபட்ட ஊராட்சிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது.

இதன்படி நேற்று இந்த 3 ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைவருக்கு ஆதரவாக உள்ள வார்டு உறுப்பினர்கள் மட்டும் வந்தனர். இது உப தலைவரை தேர்வு செய்யும் அளவிற்கு போதுமானாக இல்லாததால் மூன்றாவது முறையாக தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு பலகையில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஒட்டிவிட்டு சென்றார்.

இழுபறிக்கு காரணம் என்ன ? : ஒரு ஊராட்சியில் சரிசமமாக தலைவர் பதவிக்கு மோதியவர்களில் ஒருவர் தோல்வியை தழுவ, மற்றொருவர் வெற்றி பெற்று விடுகிறார். இருவருமே தனக்கு சாதகமான வார்டு உறுப்பினர்களை தேர்தலின் போதே நிறுத்தி இருப்பார்கள். தலைவராக வெற்றி பெற்றவர் சார்பில் நிறுத்தப்பட்ட வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தால் அங்கு உப தலைவர் தேர்தல் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நடந்துவிடும்.

இதுவே மாறிவிட்டால் உபதலைவர் தேர்தல் இழுபறி தான். தோற்றவர் கூறியபடி தான் அவர் சார்பில் நிறுத்திய வார்டு உறுப்பினர்கள் கேட்பதால், அவர்கள் உப தலைவர் தேர்தலை புறக்கணித்துவிட்டு செல்கின்றனர். அவர்களிடம் பேசிய முடிவு காணாமல், எத்தனை முறை மறைமுக தேர்தல் நடத்தினாலும் இதற்கு முடிவு எட்டப்படாது என்பதே உண்மை.

Tags : Mayor ,election ,Vice President ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!