×

இளையார் பாராளுமன்ற கூட்டம் திண்டுக்கல் ராமன்செட்டிபட்டியில்

திண்டுக்கல், மார்ச் 5: திண்டுக்கல் அருகே ராமன்செட்டிபட்டி பள்ளியில் நடந்த இளையோர் பாராளுமன்ற கூட்டத்தில் ஆக்கப்பூர்வமாக விவாதங்கள் நடந்தன. திண்டுக்கல் அருகே ராமன்செட்டிபட்டியில் உள்ள வள்ளுவன் நினைவு தொடக்கப்பள்ளியில் நேரு யுவகேந்திரா, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மாணவர்கள் நற்பணி மன்றம் இணைந்து இளையோர் பாராளுமன்றம் கூட்டம் நடத்தியது.

நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரண் கோபால் தலைமை தாங்கினார். கணக்காளர் பரஞ்ஜோதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சென்னை தலைமை செயலக நிதித்துறை பிரிவு அலுவலர் செந்தில்குமார், வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோர் இளையோர் பாராளுமன்றத்தை பற்றி விரிவாக இளைஞர்களுக்கு எடுத்துரைத்தனர். இக்கூட்டம் மாதிரி இளைஞர் பாராளுமன்றம் போல் வடிவமைத்து ஆளுங்கட்சி ஒரு பிரிவு, எதிர்க்கட்சி ஒரு பிரிவு என்று அமைத்து கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், இளைஞர்கள் வளர்ச்சி, மேம்பாடு குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதம் நடைபெற்றது.

மன்ற பேச்சாளர் அரவிந்த் சபாநாயகராக இருந்தார். கூட்டம் முடிந்தபின் இளைஞர்களுக்கு மரக்கன்று மற்றும் மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தை நேரு யுவகேந்திரா தன்னார்வக்குழு ராகவன் ஒருங்கிணைத்தார். மன்ற தலைவர் மருதைக்கலாம் நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாட்டை மன்ற செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் பிரசாந்த் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : gathering ,Dindigul Ramanchettipatti ,
× RELATED மெஞ்ஞானபுரம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் குடும்ப கூடுகை விழா