×

விவசாயிகள் வலியுறுத்தல் பிளஸ்1 தேர்வு 85 மையங்களில் 18,670 மாணவர்கள் எழுதினர்

புதுக்கோட்டை, மார்ச்5: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்1 தேர்வினை 85 மையங்களில் 18,670 மாணவ, மாணவிகள் எழுதினர்.947 மாணவ, மாணவிகள் நேற்று தேர்வு எழுத வரவில்லை. தமிழகம் முழுவதும் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 மையங்களில் தமிழ் தேர்வு நேற்று நடந்தது. இதையொட்டி மாணவ, மாணவிகள் காலை 9 மணியளவில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறையினை பார்த்தனர். பின்னர் 9.30 மணியளவில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அதை தொடர்ந்து மாணவர்கள் தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது. மேலும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் கூறப்பட்டது.

மேலும் தேர்வு மையங்களுக்கு வெளிநபர்கள் யாரும் வராமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர் 9.45 மணியளவில் தேர்வறைக்கு மாணவ மாணவிகள் சென்றனர். சரியாக 10 மணியளவில் வினாத்தாள் கொடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளது. இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 600 மாணவர்களும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 528 மணவர்களும், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 488 மாணவர்கள் என மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 616 மாணவ மாணவிகள் பிளஸ் 1 பொது தேர்வு எழுத இருந்தனர். நேற்று தொடங்கிய பிளஸ்1 தேர்வில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 330 மாணவர்களும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 183 மணவர்களும்,

இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 157 மாணவர்கள் என மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 670 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். நேற்று நடந்த தேர்வில் 657 மாணவர்களும் 290 மாணவிகளும், என மொத்தம் 947 மாணவ ,மாணவிகள் தேர்வு எழுதவில்லை. அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 28 தேர்வு மையங்கள், புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 33 தேர்வு மையங்கள், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 23 என மொத்தம் 84 தேர்வு மையங்களில் மாணவர்கள் பிளஸ்1 தேர்வினை எழுதினர். நேற்று தமிழ் தேர்வு நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்1 தேர்வினை முன்னிட்டு தேர்வு நடைபெறும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. மேலும் மாணவ மாணவிகள் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Tags : centers ,
× RELATED மாவட்டத்தில் 4 மையங்களில் இன்று நீட் தேர்வு