×

அறந்தாங்கி பகுதியில்  உரிய அனுமதியின்றி செயல்படும் தனியார் குடிநீர் உற்பத்தி மையங்கள்

அறந்தாங்கி, மார்ச்.5: அறந்தாங்கி பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் இயங்கும் குடிநீர்உற்பத்தி மையங்கள் நாள் தோறும் லட்சக்கணக்கான லிட்டர்தண்ணீரை உறிஞ்சி வருகின்றன. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமங்களில் குளம், ஏரி, கிணறுகளில் இருந்து தண்ணீர்எடுத்து குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர் கிராமங்கள் மட்டும் அல்லாது அறந்தாங்கி நகரில் கூட பல சமுதாயக் கிணறுகள் மூலமும், சுக்கான்குளம் மூலமும், அருகாமையில் உள்ள மூக்குடியில் உள்ள கிணறு மூலமும் பெறப்படும் தண்ணீரை நகர மக்களின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்து வந்தது.

நாளடைவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர்என்ற பெயரில் கிராமப்பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் மூலம் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, பல ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர்குழாய்கள் அமைக்கப்பட்டு கூட்டுக்குடிநீர்திட்டம் என்ற பெயரிலும், அறந்தாங்கி நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மூலம் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்தும் குடிநீர்வழங்கப்பட்டது. தங்கள் வீட்டருகே பாதுகாக்கப்பட்ட குடிநீர்குழாய் மூலம் கிடைத்ததால், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர்எடுத்து பயன்படுத்துவதை தவிர்த்து, குழாய் தண்ணீரை பயன்படுத்த தொடங்கினர் .இதனால் குடிநீர்வழங்கி வந்த நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.

தற்போது பல கிணறுகள் தூர்ந்து போயும், சிறு சிறு குளங்கள் ஆக்கிரமிப்புகளால் காணாமலும் போய்விட்டன. இந்த நிலையில் நாகரிக வளர்ச்சி காரணமாக மக்கள் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கிய குழாய் தண்ணீரை பயன்படுத்துவதை தவிர்த்து, சுத்திகரிக்கப்பட்ட கேன் குடிநீரை பயன்படுத்த தொடங்கினர். கேனில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டர்எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஐ.எஸ்.ஐ தரச்சான்று பெறவேண்டும், உற்பத்தி மையத்தில் கெமிஸ்ட் எனப்படும் ஆய்வ நுட்பனர்பணியில் இருக்க வேண்டும், உற்பத்தி மையத்தின் சுற்றுப்புறம் சுகாதாரமானதாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் பல்வேறு துறைகளும் இணைந்து அனுமதியும் பெற்ற பின்னரே முறையாக உரிமம் பெற்ற பின்னரே குடிநீர்உற்பத்தி செய்ய முடியும்.

இவ்வாறு அதிக பொருட்செலவில் கேன் வாட்டர்நிறுவனங்கள் முறையாக குடிநீர்உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் தண்ணீரை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்துறையினர்ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். இதனால் இந்த நிறுவனங்கள் முறையாக தண்ணீரை உற்பத்தி செய்து வருகின்றன. மேலும் இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும். உரிமத்தை புதுப்பிக்கும்போது பல்வேறு துறையினரும் முறையாக ஆய்வு நடத்துவார்கள்.அந்த ஆய்வில் விதிகளை முறையாக கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது.இதனால் கேன் வாட்டர்நிறுவனங்கள் முறையாக விதிகளை கடைபிடிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் மினரல் வாட்டர்எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்த ஆர்வம் காட்ட தொடங்கியதால், அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் விதிகளை மீறி ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீர்உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தண்ணீரை 1000 லிட்டர்வாட்டர்டேங்குகளில் நிரப்பி, லோடு ஆட்டோக்கள் மூலம் கிராம பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு குடம் ரூ.10 என்ற கட்டணத்தில் விற்பனை செய்யப்படும் இந்த தண்ணீரை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற குடிநீர்தயாரிப்பு நிறுவனங்கள் எந்த துறையிலும் முறையாக அனுமதி பெறுவதில்லை. மேலும் இந்த நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர்தண்ணீரை நிலத்தடியில் இருந்து உறிஞ்சி குடிநீர்உற்பத்தி செய்கின்றனர் இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பல மடங்கு கிழே சென்றுள்ளது. முறையான அனுமதி இல்லாமல் உற்பத்தி செய்யும் குடிநீரை அரசின் எந்த துறையினரும் முறையாக ஆய்வு செய்வதில்லை.

மணமேல்குடி பகுதியில் உள்ள குடிநீர்உற்பத்தி நிறுவனம் இறால் பண்ணைக்கு அருகில் இயங்கி வருகிறது. இறால் பண்ணையில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், அப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் குடிநீரில் கலப்பதால் பொதுமக்கள் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் இதுகுறித்து பொதுமக்கள் புகார்கூறினாலும், எந்த துறையினரும் குடிநீர்உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த நிலையில் சமீபத்தில் சென்னை ஐகோர்ட் குடிநீர்உற்பத்தி நிறுவனங்கள் நிலத்தடி நீரை எடுப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து விதிகளை மீறிய கேன் வாட்டர்உற்பத்தி நிறுவனங்களை தமிழக அரசு சீல் வைத்தது. இதனால் தமிழகம் முழுதும் வாட்டர்கேன்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அறந்தாங்கி நகரில் குடிநீர்வினியோகம் செய்வதை அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்ஒருவர்கூறியது: எந்த வித அனுமதியும் பெறாமல் தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர்தண்ணீரை நிலத்தடியில் இருந்து உறிஞ்சும் நிறுவனங்களை பற்றி அரசின் எந்த ஒரு துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவர;கள் தொடர்ந்து தண்ணீரை உறிஞ்சி, விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர் எந்த அனுமதியும் பெறாமல் தண்ணீரை உறிஞ்சும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.இவ்வாறு அவர்கூறினார்.

அறந்தாங்கி குறிப்பாக மணமேல்குடி கடலோரப் பகுதிகளில் தினந்தோறும் லட்சணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சி தனியார்நிறுவனங்கள் குடிநீர் விற்பனை செய்வதால், அப்பகுதியில் கடல்நீர்பூமிக்கு அடியில் உட்புகுந்து வருகிறது. இதனால் நாளடைவில் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு, முறையான அனுமதி இல்லாமல் நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சும் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சும் அவலம் லோடு ஆட்டோவில் விற்பனை உற்பத்தி செய்யப்படும் தண்ணீரை 1000 லிட்டர்வாட்டர்டேங்குகளில் நிரப்பி, லோடு ஆட்டோக்கள் மூலம் கிராம பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு குடம் ரூ.10 என்ற கட்டணத்தில் விற்பனை செய்யப்படும் இந்த தண்ணீரை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

Tags : drinking water plants ,Aranthangi ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு