×

கைக்குழந்தையுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் திரளான பக்தர்கள் திரண்டனர்

பெரம்பலூர்,மார்ச் 5:கவுல்பாளையம் காளியம்மன் கோவில் திருவிழாவில் கைக் குழந்தையுடன் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பெரம்பலூர் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமம், காளியம்மன் நகர் பத்ர காளியம்மன் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 25ம்தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி திருவீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதித் திரு விழா நேற்று மாலை மலையடிவாரத்திலுள்ள பத்ர காளியம்மன் கோயில் முன் நடைபெற்றது.

இதனையொட்டி காளியம்மன் நகரை சேர்ந்த 70 பெண்கள் உள்பட நூற்றுக் கும் மேற்பட்டோர் தங்களது பல்வேறு நேர்த்திக் கடன்களுக்காக மஞ்சள் ஆடைஉடு த்தி, கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று கவுல்பாளையம் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு ஆவேசத்துடன் தீ குழிக்குத் திரு ம்பி வந்தனர். அங்கு 5 மீட் டர் நீளத்தில் 2 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக் குழிக்குள் இறங்கி  பத்திரகாளியை வணங்கி, தீயை மிதித்தபடி நடந்து சென்றனர். இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 50 பேர் கைக்குழந் தைகளை தோளில் சுமந்த படிவந்து தீமிதித்தது பார்க்கும் பலரையும் பரவசப் படுத்தி குலவைச் சத்தமிடச் செய்தது.

நிகழ்ச்சியைக் காண, காளியம்மன் நகர் கல்பாளையம் மேற்கு மலையடிவாரப் பகுதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று(5ம்தேதி) பல்வேறு மக்கள் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற வேண்டி, முகம், கை, நாக்கு, முதுகு ஆகியவற்றில் அலகு குத்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றும் விழா நடக்கிறது. நாளை (6ம்தேதி) வெள்ளிக்கிழமை மஞ்சள் நீருடன் திருவிழா முடிவடைகிறது.

Tags : Devotees ,pool ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி