×

ஓய்வுபெற்ற ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன் 10ம் தேதி நடத்த முடிவு

பெரம்பலூர்,மார்ச் 5: ஓய்வுபெற்ற ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வலியுறுத்தி வரும் 10ம்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மின்மோட்டார் இயக்குபவர் மற்றும் துப் புரவு பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. பெரம்பலூர் புது பஸ்டாண் டு அருகே உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் பெரம்பலூர் மாவட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மின்மோட்டார் இயக்குபவர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தின் மாவட்ட அள விலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளார் சின்னப்பிள்ளை வரவேற்றார்.

மாவட்ட பொருளாளர் நாகராஜன், மாவட்ட ஆலோசகர் அன்பரசன், ஒன்றிய தலைவர்கள் பெரம்பலூர் அர்ஜுனன், வேப்பூர் ரவி, ஆலத்தூர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன் றியங்களில் ஊதியம் நிர்ணயம் செய்து, நிலுவைத் தொகையை வழங் குவதோடு, தொடர்ந்து ஊதியம் வழங்க வேண்டும். 2020ம் ஆண்டு அரசு அறிவித்த பொங்கல் போனஸ் ரூ.1000 இதுவரை அனைவருக்கும் வழங்கவில்லை. அவற்றை உடனே வழங்க வேண்டும். 2016ம் ஆண்டுமுதல் டேங்க் சுத்தம் செய் வதற்கு கூலித் தொகை வழங்கப்படவில்லை.

நிலுவைத் தொகையைத் தாம தமின்றி வழங்குவதோடு, தொடர்ந்து தடையின்றி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் ஊதியமும் மாதத்தின் முதல் தேதியிலேயே வழங்கப்பட வேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு அறிவித்த அகவிலைப்படி 2019 ஜனவரி முதல் வழங்கப்பட வில்லை. நிலுவையை வழங்கி தொடர்ந்து மாதாந்திர ஊதியத்துடன் வழங்கப்பட வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் உரிய காலத்தில் சீருடை வழங்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க வழங்க வேண்டும்.

வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை ஆ ணையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி வரும் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பெரம்பலூர் மாவட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மின் மோட்டார் இயக்குபவர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் 4 ஒன்றியங்களை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர். முடிவில் வேப்பந்தட்டை ஒன்றியத் தலைவர் பெரியசாமி நன்றி தெரிவித்தார்.

Tags : demonstration ,Office ,pensioners ,Collector ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்