×

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை சிறப்பு திட்ட முகாம்: 4 இடங்களில் நடக்கிறது

பெரம்பலூர்,மார்ச் 5: பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (6ம் தேதி) 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது என கலெக்டர் சாந்தா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தமிழக அரசினால் சிறப்புத் திட்ட முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தி ட்டத்தின்படி தாசில்தார் தலைமையில், வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடிச் சென்று அவர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், சிறப்புத் திட்டமுகாம்கள் நட த்தப்படுகிறது.

இந்த முகாம்களில் பொது மக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல் லாத இனங்கள்), சிட்டா நகல்கள், ஆதார் அட்டைகள் பெற பதிவுகள் செய்தல், குடும்ப அட்டைகளில் மேற் கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு இறப்பு சான் றிதழ்கள், சாதிச்சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள், வாரிசு ரிமைச் சான்றிதழ்கள், சிறு மற்றும் குறுவிவசாயிகளுக்கான சான்றிதழ்கள், முத ல் பட்டதாரி அல்லது குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ் கள், ஆண் வாரிசு இல்லை என்ற சான்றிதழ்கள், குடும்பத்தில் இருபெண் குழ ந்தைகள் மட்டும் உள்ளதற்கான சான்றிதழ்கள், முதி யோர் உதவித்தொகை உள் ளிட்ட உதவித்தொகை கோரும் மனுக்கள், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் உதவி கள்பெற சமர்பிக்கப்படும் மனுக்கள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத் தின்கீழ் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், துயர் துடைப்பு மற்றும் விபத்து நிவா ரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை,

மேலும் ஒரேநாளில் தீர்வு காணக் கூடிய இதர மனுக்கள் மீது ஆணைகள் பிறப்பித்தல் ஆகியவை அன்றைய தினமே உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. இதற்காக நடத்தப்படும் முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் கணி னியில் பதிவு செய்யப்ப ட்டு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படுகின்றன. உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் சம்மந் தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். இதன்படி நாளை (6ம் தேதி) பெரம்பலூர் தாலுகாவில் சத்திரமனை, வேப்பந்தட்டை தாலுகாவில் பாண்டகப்பாடி, குன்னம் தாலுகாவில் மழவராய நல்லூர் மற்றும் ஆலத்தூர் தாலுக்காவில் கொளக்காநத்தம் ஆகியக் கிராமங்களில் சிற ப்புத் திட்டமுகாம்கள் நடை பெறவுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

Tags : project camp ,district ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...