×

மாரியம்மன் கோயில் சிலையை திருடி வீட்டில் பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

நாகை,மார்ச்5: வேளாங்கண்ணி அருகே திருடிய சிலையை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான அம்மன் சிலை உள்ளிட்ட பொருட்கள் போலீசார் மீட்டனர். நாகை மாவட்டடம் வேளாங்கண்ணி அருகே சின்னதம்பூரில் செல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலில் இருந்த மூன்றரை அடி உயரம் கொண்ட உற்சவர் செப்பு சிலை, இரண்டு கவரிங் ஆரம், 5 குத்து விளக்குகள், 6 சொம்புகள், ஒரு கைவிளக்கு ஆகியவை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நாகை எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த சிலை வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் பொன்னங்காட்டை சேர்ந்த உதயராஜன்(30) திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்பிரிவு போலீசார் உதயராஜனை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அம்மன்சிலையை திருடியது தெரியவந்தது. மேலும் இவர் அந்த சிலையை வீட்டின் பின்பகுதியில் மறைந்து வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பதுக்கி வைத்திருந்த அம்மன்சிலை, இரண்டு கவரிங் ஆரம், 5 குத்து விளக்குகள், 6 சொம்புகள், ஒரு கைவிளக்கு ஆகியவற்றை மீட்டனர். இவற்றின் மதிப்பு ரூ. 2லட்சம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Mariamman Temple ,
× RELATED வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பூச்சொரிதல்