×

பழையாறு அதிவேக விசைப்படகு உரிமையாளர்கள் குடும்பங்களுக்கு உதவி தொகை வழங்க வலியுறுத்தல்

கொள்ளிடம், மார்ச் 5: கொள்ளிடம் அருகே பழையாறு அதிவேக விசைப்படகு உரிமையாளர்களின் குடும்பங்களுக்கு நிதிஉதவி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகம் மாவட்டத்திலேயே இரண்டாவது சிறந்த துறைமுகமாக இருந்து வருகிறது. இங்கிருந்து சுமார் 350 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுப்படகுகள் மூலம் தினந்தோறும் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதில் 80 படகுகள் அதிவேக இஞ்சின் பொறுத்தப்பட்ட விசைப்படகுகள் உள்ளன. கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதிவேக விசைப்படகு உரிமையாளர்களுக்கும் சாதாரண விசைப்படகு உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சமரச முயற்சியால் ஈடுபட்டும் உரிய முடிவு எட்டப்படவில்லை.

இதனால் அதிவேக விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் இப்படகுகளை நம்பியுள்ள சுமார் ஆயிரம் குடும்பங்கள் எவ்வித வருமானமும் இன்றி பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். அவர்களின் குழந்தைகள் பள்ளிப்படிப்புக்கு கல்விக்கட்டணம் கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். மீன்பிடித்துறை அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டதன் காரணமாகத்தான் இப்படி பல குடும்பங்கள் அவதியடைகின்றனர் என்று அதிவேக விசைப்படகு உரிமையாளார்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிவேக விசைப்படகு உரிமயாளர்களுக்கு மேலும் 1 வருடம் கால அவகாசம் கொடுக்க மீன்பிடிக்க அனுமதியளித்து பின்னர் படிபடியாக அதிவேக எஞ்சின்களை அகற்றிவிட்டு அதற்குப்பதிலாக சாதாரண இஞ்சின்களை பொறுத்திக்கொள்ள அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என்று விசைப்படகு உரிமையாளர்களின் குடும்பங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Owners ,highway owners ,families ,
× RELATED சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் ஆய்வகம், பயிற்சி மையம் திறப்பு