×

கீழ்வேளூர் சுடுகாட்டை சீரமைக்கும் பணி துவக்கம்

கீழ்வேளூர், மார்ச் 5: கீழ்வேளூர் சுடுகாட்டை தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கும் பணி துவங்கியது. இதற்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கீழ்வேளூர் மயானத்தில் சுடுகாடு உள்ளது. இந்த மயானத்திற்கு கீழ்வேளூர் பேரூராட்சி பகுதியும், அகரகடம்பனூர் ஊராட்சியை சேர்ந்த வடக்கு வெளி, பிள்ளை தெருவாசல், ஆலக்கரை, தெற்கு தெரு, வடக்குவெளி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் சமத்துவ மயானமாக உள்ளது. இந்த சுடுகாட்டில் இந்து மற்றும் கிருஸ்துவர்களின் உடல்களும் அடக்கம் செய்யப்படுகிறது. தனியாக தகன மேடை கொட்டகையும் உள்ளது. மயானம் சுற்றி வேலிகள் மற்றும் வாசல் பகுதி கேட்டும் இல்லாமல் உள்ளது. மயானத்தில் கீழ்வேளூர் பேரூராட்சியில் சேறும் குப்பைகள் தினம் தோறும் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. மேலும் இந்த குப்பைகள் எரிந்து சாம்பலாக தீ வைக்கப்படுகிறது. குப்பைகளில் உள்ள பாலித்தின் பைகளுடன் குப்பை எரிவதால் சுடுகாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

இது தொடர்பான செய்தி, படத்துடன் தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக கீழ்வேளூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கியது. சுடுகாட்டியில் கொட்டப்பட்ட குப்பைகள் எரிவை கீழ்வேளூர் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் ராஜராஜன் தலைமையில் தீயை அனைத்தனர். சுடுகாட்டின் முன்பக்க கேட் சரி செய்யப்பட்டு பூட்டப் பட்டது. கோழி இறைச்சி கடைகளுக்கு சுடுகாட்டில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவது சம்பந்தமாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் சுடுகாட்டியில் குப்பையை பொக்லைன் இயந்திரம் கொண்டு சுத்தம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கீழ்வேளூர் சுடுகாட்டின் சீர்கேடு சம்பந்தமாக செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், உடன் சுடுகாட்டை சீரமைக்க நடவடிக்கை எடுத்த கீழ்வேளூர் பேரூராட்சிக்கும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் நன்றி தெரிவித்தனர்.
காரைக்கால், மார்ச் 5: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி காணொளி மூலம் மக்கள் குறைகளை நாளை (6ம் தேதி) கேட்கவுள்ளதால், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தினசரி மாலை 5 மணி முதல் 6 மணி வரை புதுச்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் குறைகளை கேட்டுவருகிறார். அதேபோல், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொளி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது. நாளை (6ம்தேதி) மாலை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 3 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில், புகார்களை எழுத்து வடிவில் கொண்டுவந்து முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Commencement ,Kielveloor ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...