×

மண்புழு உரம் தயாரிப்பது எப்படி?

கொள்ளிடம், மார்ச் 5: மண்புழு உரம் தயாரிப்பது எப்படி? என்பது குறித்து வேளாண் உதவி இயக்குநர், விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தார். நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பது குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு கொள்ளிடம் வேளாண்உதவி இயக்குநர் சுப்பையன் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்து மண்புழு தயாரிப்பது எப்படி என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தற்போது கோடைக்காலம் நெருங்குவதால் மண்புழு தயாரிப்பதற்கு ஏற்ற தருணமாகும். அதற்கு வேளாண்துறை மானியம் வழங்கி வருகிறது. எனவே இயற்கை உரத்தை பாதுகாக்கும் வகையில் மண்புழு உரம் தயாரித்து வயலுக்கு இட்டு இயற்கை விவசாயத்தை பெருக்க வேண்டும் என்றார். வேளாண் அலுவலர் விவேக், வேளாண் உதவி அலுவலர்கள் வேதையராஜன், மகேஷ், பாலச்சந்திரன், சவுந்தர்ராஜன், இயற்கை முன்னோடி விவசாயிகள் பன்னீர், மணிமாறன் மற்றும் இயற்கை விவசாயிகள் மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில்...