×

ரத்த சோகையில்லாமல் கர்ப்பிணிகள் ஆரோக்கியமாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும் காரைக்கால் கலெக்டர் அறிவுறுத்தல்

காரைக்கால், மார்ச்5: காரைக்கால் மாவட்டத்தில், கர்ப்பிணிகள் ரத்த சோகையின்றி ஆரோக்கியமாக வாழ்வதை, அரசுத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். என, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் நடைபெற்றுவரும், போஷன் ஆபியான் என்கிற தேசிய ஊட்டச்சத்து திட்டம், புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திட்டம் தொடர்பாக கலெக்டர் அலுவகலத்தில் நடைபெற்ற விவாத கூட்டத்திற்கு, கலெக்டர் அர்ஜூன் சர்மா தலைமை வகித்தார். கடந்த 3 மாதங்களில் போஷன் அபியான் திட்டத்தின் செயல்பாடுகள், மேம்பாட்டுக்கான முறைகள் குறித்து, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி சத்யா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலெக்டரிடம் எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து, அரசுத்துறை அதிகாரிகளிடம் கலெக்டர் அர்ஜூன் சர்மா பேசியது:
மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊட்டச்சத்துமிக்க குழந்தைகளை உருவாக்குவதுதான். அதனால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிகள் நல்ல ஆரோக்கியமாக இருப்பதை துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் ரத்த சோகையின்றி ஆரோக்கியமாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகள் எடை குறையாமல் இருப்பதையும் கண்காணித்து ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் எல்லா கிராமங்களிலும் கழிவறை அமைத்தலை மேம்படுத்த வேண்டும். சுகாதாரமான குடிநீர் கிடைப்பது, சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பது முக்கியம். அங்கன்வாடிகள், சமுதாயக்கூடங்கள் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். அடிக்கடி இது குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கிராமங்கள் தோறும் நடத்தவேண்டும். அப்போதுதான் திட்டம் சிறப்பாக செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : collector ,Karaikal ,women ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...